காய்ச்சிய தேங்காய் சட்னி
0
தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1 மூடி
பொட்டுக்கடலை - 30 கிராம்
பச்சை மிளகாய் - 3 என்னம்
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 4
கறிவேப்பிலை - 1 இனுக்கு
நசுக்கிய சிவப்பு வத்தல் - 1
செய்முறை:
முதலில் மிக்ஸியில் தேங்காய்,பச்சை மிளகாய் சேர்த்து ஒரு சுத்து சுத்தி பின் பொட்டுக்கடலை, உப்பு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.பின் கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் போட்டு வதக்கி அரைத்த சட்னியை ஊற்றி 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்தபின் இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
தோசை, இட்லிக்கு ஊற்றி சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.