கத்திரிக்காய் சட்னி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 1/4 கிலோ

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 4

கறிவேப்பிலை - சிறிதளவு

மல்லி - 1 தேக்கரண்டி

வரமிளகாய் - 4

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

புளி - ஒரு எலுமிச்சை அளவு

கடுகு - 1 ஸ்பூன்

பெருகங்காய பொடி - 1/4 தேக்கரண்டி

எண்ணை - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கத்திரிக்காயை வெட்டி வேகவைத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். பெரிய வெங்காயத்தினை பொடியாக நறுக்கவும்

பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்

புளியை கரைத்து வைக்கவும்

வரமிளகாடய், கடலைபருப்பு, மல்லி இவற்றை வெறும் வானலியில் வறுத்து பொடிக்கவும்

கடாயில் எண்ணை விட்டு கடுகு,கறிவேப்பிலை, பெருங்காயப்பொடி தாளித்து, வெங்காயம்,பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். பின் அரைத்த கத்திரிக்காய்,புளி தண்ணீர், மஞ்சள் பொடி, உப்பு, அரைத்த பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும்

குறிப்புகள்:

இட்லி, தோசைக்கான கத்திரிக்காய் சட்னி ரெடி