கத்திரிக்காய் கோசுமல்லி
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 250 கிராம் (1/4 கிலோ)
உருளைக்கிழங்கு - 100 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 8
தக்காளி - 2
புளி - எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை:
கத்திரிக்காயையும், உருளைக்கிழங்கையும் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். (குக்கரிலும் வேக வைக்கலாம்)
அந்த காலத்தில் விறகு அடுப்பு என்பதால் கத்திரிக்காயின் மேலே எண்ணெய் தடவி சுடுவார்கள். வெந்ததும் கத்திரிக்காயும், உருளைக்கிழங்கையும் தோலுரித்து பிசைந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
அதனுடன் பிசைந்த கத்திரி கலவையை போட்டு, புளியை கரைத்து ஊற்றி உப்பு, கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு கொதித்தவுடன் இறக்கவும்.