கத்தரிக்காய் தக்காளி கொத்சு
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 1/4 கிலோ
பொடியாக அரிந்த தக்காளி - 1 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1/2 கப்
சிறிய வெங்காயம் - 7
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கடுகு - 1 தேக்கரண்டி
அரிந்த கொத்தமல்லி இலை - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கத்தரிக்காய்களை நெருப்புத் தணலில் சுட்டு, ஆறியதும் அவைகளின் தோல்களை உரித்து சதைப்பற்றான பகுதியை எடுத்து பிசைந்து வைக்கவும்.
ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
எண்ணெயை ஊற்றி அது சூடானதும் கடுகைப்போடவும்.
கடுகு வெடித்ததும் அரிந்த வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளியையும் மஞ்சள் தூளையையும் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
சிறிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை நன்கு அரைத்து அதில் சேர்த்து மறுபடியும் சில நிமிடங்கள் வதக்கவும்.
2 கப் நீர் ஊற்றி நன்கு கொதித்து வரும்போது பிசைந்து வைத்துள்ள கத்தரிக்காய் விழுது, கொத்தமல்லி இவற்றுடன் தகுந்த உப்பையும் சேர்த்து எல்லாம் கொதித்து, சேர்ந்து வரும்போது இறக்கவும்.