கத்தரிகாய் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரிகாய் - 4 சிறியது

சின்ன வெங்காயம் - 10

வத்தல் மிளகாய் - 5

தக்காளீ - 2

கடலைபருப்பு - 1 மேசைக்கரண்டி

பூண்டு - 2 பல்

மல்லி தழை - 50 கிராம்

புளி - 2 கொட்டை அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கத்தரிகாயை சிறிதாக நறுக்கி கொள்ளவேண்டும்

தக்காளி வெங்காயத்தை நறுக்கி கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணை ஊற்றி கடலைபருப்பை வறுத்துதனியாக எடுத்து கொள்ளவேண்டும்.

அதேஎண்ணையில்நறுக்கிய கத்தரிகாய், வத்தல், புளி, தக்காளி, வெங்காயம், மல்லிதழை ஆகியவற்றை வதக்கி கொள்ளவேண்டும்.

வறுத்த கடலைபருப்புடன் வதக்கிய அனைத்துபொருட்களையும் சேர்த்து சிறிது உப்புடன் மிக்சியில் அரைக்கவேண்டும்.

பின் அரைத்த விழுதுடன் தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து அதில் கடுகு,உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, தாளிக்க வேண்டும்.

குறிப்புகள்: