கடலைப்பருப்பு தேங்காய் சட்னி
0
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 3 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 6
பெரிய வெங்காயம் - 2
தேங்காய்ப்பூ - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கடலைப்பருப்பு, சிவப்பு மிளகாய், நறுக்கிய வெங்காயம் எல்லாவற்றையும் சிறிது எண்ணெய் ஊற்றி, தனித்தனியாக வறுக்கவும்.
பின் அவற்றுடன், தேங்காய்ப்பூ, உப்பு சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, சட்னியில் சேர்க்கவும்.
சுவையான சட்னி ரெடி.
குறிப்புகள்:
இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ள சுவையான சட்னி.