எண்ணெய் கத்திரிக்காய் சட்னி

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 1/2 கிலோ

புளி - 50 கிராம்

கடுகு - 1 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

பூண்டு - 5 பல்

கறிவேப்பிலை - மூன்று கொத்து

வெங்காயம் - 150 கிராம்

தக்காளி - 150 கிராம்

சீரகம் - 2 மேசைக்கரண்டி

கருப்பு எள் - 50 கிராம்

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

தனியாத்தூள் - 2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி இலை - மேலே தூவ சிறிது

நல்லெண்ணெய் - 1/4 கிலோ

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கத்திரிக்காயை ஸ்டஃப் செய்வதற்கு அரிவது போல் அரிந்து தண்ணீரில் ஊற போடவும்.

புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும்.

சீரகத்தை லேசாக வறுத்து எடுத்து விட்டு, எள்ளை கல் இல்லாமல் அரித்து எடுத்து ஈரமில்லாமல் வறுத்து எடுக்கவும். சீரகம், எள் இரண்டையும் மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி மையாக அரைத்து எடுக்கவும்.

இப்போது சட்டியில் நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, மிளகு, பூண்டு தட்டி போட்டு, கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

வெங்காயம், தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

பிறகு கத்திரிக்காயை அதில் போட்டு மூடிபோட்டு இரண்டு நிமிடம் வேக விடவும்.

மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்கவும்.

வதக்கி கரைத்து வைத்த புளியையும், அரைத்து வைத்த எள், சீரகத்தையும் போடவேண்டும்.

நன்கு கொதித்ததும் கொத்தமல்லியை தூவி இறக்கவும்.

குறிப்புகள்: