உளுத்தம் பருப்பு சட்னி (2)

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி

தக்காளி - 3

சின்ன வெங்காயம் - 10

காய்ந்த மிளகாய் - 3

கடுகு - தாளிக்க

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவயான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாயை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.பின் உளுத்தம்பருப்பை வாசம் வரும் வரை மிதமான தீயில் வறுத்து தனியே வைக்கவும்

பின் வெட்டி வைத்துள்ள தக்காளி, சின்ன வெங்காயம் ஒன்றன் பின் ஒன்றாக தனி தனியே வறுத்து எடுக்கவும்.

எல்லாவற்றையும் ஆறவிட்டு உப்பு சேர்த்து மீதமுள்ள எண்ணையுடன் மிக்ஸ்யில் அரைக்கவும்.விருப்ப பட்டால் தாளிக்கலாம்.

குறிப்புகள்:

இட்லி தோசைக்கு சுவையான சுவையான உளுத்தம்பருப்பு சட்னி ரெடி