உடைச்சக்கடலை தக்காளி சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 1/2 மூடி

உடைச்சக்கடலை - 50 கிராம்

சிவப்பு மிளகாய் - 5

பெருங்சீரகம் - 1 தேக்கரண்டி

நறுக்கிய வெங்காயம் - 1 கப்

நறுக்கிய தக்காளி - 1 கப்

தண்ணீர் - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - 1 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு இனுக்கு

செய்முறை:

வெங்காயம் ,தக்காளி இரண்டையும் வாணலியில் போட்டு வதக்கி 1/4 கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்(5 நிமிடம்).

தேங்காய், உடைச்சக்கடலை, சிவப்பு மிளகாய் மூன்றையும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.

பின் இதனுடன் பெருங்சீரகம்,வதக்கிய கலைவையையும் போட்டு அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுத்தம்பருப்பு போட்டு கடுகு வெடித்தபின் கறிவேப்பிலை போட்டு அரைத்த கலைவையை போட்டு 2 கப் தண்ணீர் விட்டு உப்பு போட்டு கொதிக்கவிடவும்.

குறிப்புகள்: