ஈஸி வெங்காயச்சட்னி
0
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 4
வடகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10 இலை
பூண்டு - 5 பல்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிக்ஸியில் காய்ந்த மிளகாய் மற்றும் பெரிய வெங்காயத்தை மைப்போல அரைத்து எடுத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் வடகம் போடவும்.
பிறகு கறிவேப்பிலை மற்றும் நசுக்கிய பூண்டை போடவும்.
மிக்ஸியில் அரைத்த வெங்காய விழுதை போட்டு கொதி வந்ததும் 2 நிமிடம் வைத்து பிறகு அடுப்பை அணைத்து, எடுத்து பரிமாறவும்.