இனிப்பு சீரக சட்னி
0
தேவையான பொருட்கள்:
வெல்லம் - 100 கிராம்
சீரகம் - 2 மேசைக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் சீரகத்தினை போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தினை 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
வறுத்த சீரகத்தினை நன்றாக பொடித்து கொள்ளவும்.
பின்னர் கரைந்து உள்ள வெல்லத்தில் சீரகம் பொடி மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.