இனிப்பு சட்னி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1/2 கப்

சிவப்பு மிளகாய் வத்தல் - 3

புளி - 1/2 கோலி அளவு

தேங்காய் துருவல் - 5 தேக்கரண்டி

உப்பு - 2 சிட்டிகை

துருவிய வெல்லம் - 4 தேக்கரண்டி

தாளிக்க:

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - சிறிதளவு

சிறிய வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1 கப்

செய்முறை:

வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி உளுத்தம் பருப்பை போட்டு 2 நிமிடம் வறுக்கவும்.

பின் புளி,வத்தல்,தேங்காய் சேர்த்து மீண்டும் வறுக்கவும்.

மிளகாயின் வாசம் வந்தவுடன் நிறுத்தி சூடு ஆறிய பின் கலவையை அரைக்கவும்.

பின் வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

பின் அரைத்த கலவையை ஊற்றி (நிரைய தண்ணீர் ஊற்றலாம்) உப்பு போடவும்.

ஒரு கொதி வந்ததும் வெல்லத்தை போடவும். நன்கு கலக்கி 4 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: