இனிப்பு கார சட்னி
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - 1/2 துண்டு
பூண்டு - 2 பற்கள்
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சர்க்கரை - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்புத்தூள் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் தக்காளி பச்சைமிளகாயை நொறுங்க நறுக்கி கொள்ளவும்.
இஞ்சி பூண்டை நசுக்கி வைக்கவும்.
ஒரு சிறிய சட்டியில் எண்ணெயை ஊற்றி கடுகைப் போட்டு பொரியவிட்டு, சோம்பு கறிவேப்பிலையைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.
பிறகு வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டை ஒரே நேரத்தில் போட்டு நன்கு வதக்கவும். தொடர்ந்து மஞ்சள்தூள், உப்புத்தூளை போட்டு மையாக வதக்கவும்.
அதில் ஒரு கோப்பை நீரைச் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கொதிக்கவிடவும்.
குழம்பு கொதித்து கெட்டியாக ஆனவுடன் சர்க்கரையைப் போட்டு நன்கு கலக்கி விட்டு இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இந்த சட்னி சப்பாத்திக்கு ஏற்ற பக்க உணவு.