ஆப்பிள் சட்னி (1)
0
தேவையான பொருட்கள்:
புளிப்பு ஆப்பிள் - 1
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
தேங்காய்த்துருவல் - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஆப்பிளை துருவிக் கொள்ளுங்கள்.
அடுப்பில் சட்டி வைத்து எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து கறிவேப்பிலை, மிளகாயை கிள்ளிப் போட்டு வறுத்து இறக்கவும்.
பின்பு வறுத்த பருப்புக்கள், ஆப்பிள் துருவல், தேங்காய்த்துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.
கடைசியில் உப்பு போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு கடுகை தாளித்து கொட்டி கிளறி எடுத்து பரிமாறவும்.