ஆப்பிள் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் (தோலுடன் துருவியது) - 1

ஆப்பிள் சாறு - 1/2 கப்

சீரகத்தூள் - ஒரு சிட்டிகை

மல்லித்தூள் - ஒரு சிட்டிகை

கறுவாபட்டைத்தூள் - ஒருசிட்டிகை

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

ஜாதிக்காய்தூள் - சிறிதளவு

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

சீனி - 1 கப்

ஆலிவ் எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் தாட்சியை வைத்து அது சூடாகியதும் அதில் ஒலிவ் எண்ணெயை விட்டு சூடாக்கவும்.

சூடான எண்ணெயில் சீரகத்தூள், மல்லித்தூள், ஏலக்காய்தூள், கறுவாப் பட்டைத்தூள், ஜாதிக்காய்த்தூள், மிளகாய்தூள், ஆப்பிள், சீனி, உப்பு இவையாவற்றையும் வதக்கவும்.

சீனி நன்றாக பசையாகி (பேஸ்ட்) ஆகி எண்ணெய் பிரியும் வரை வதக்கிய பின் ஆப்பிள் சாறு சேர்த்தூ பரிமாறவும்.

குறிப்புகள்: