வேர்க்கடலை இனிப்பு பஜ்ஜி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை (தோல் நீக்கியது) - 2 கப்

வெல்லம் - 1/2 கப்

உப்பு - இரண்டு சிட்டிகை

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

பஜ்ஜி மாவு செய்ய:

கடலை மாவு - ஒரு கப்

அரிசி மாவு - அரை கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வேர்க்கடலையை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். வெல்லத்தை பொடித்து விட்டு ஒரு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.

அதனை அடுப்பில் வைத்து கொத்திக்க விடவும். கொதித்து ஆறிய வெல்லதை வடிகட்டி அழுக்கு நீக்கி விடவும்.

வேர்க்கடலை மாவுடன் வெல்லப்பாகு மற்றும் உப்பு சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகள் செய்து கொள்ளவும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்துக் கொள்ளவும்.

வேர்க்கடலை உருண்டைகளை பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: