மஸ்ரூம் பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பட்டன் காளான் துண்டுகள் - 10

ரெடிமேட் பஜ்ஜி மாவு – 1 கப்

சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் (தேவைப்பட்டால்) – 1/4 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி

சீஸ் – 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவை போட்டு அதில் சீரகத்தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சீஸ் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.

காளான் துண்டுகளை குறுக்காக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காளான் துண்டுகளை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும். எண்ணெயில் போட்டு பொரிந்ததும் எண்ணெயை வடித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: