மங்களூர் போண்டா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 200 கிராம்

பச்சரிசி மாவு - 30 கிராம்

கெட்டித் தயிர் - 150 கிராம்

சீரகம் - 5 கிராம்

பச்சைமிளகாய் - 20

இஞ்சி - சிறிய துண்டு

சமையல் சோடா - ஒரு சிட்டிகை

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தயிரை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் உப்பு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும்.

இஞ்சி, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி தயிர்க் கலவையில் போட்டு நன்கு கலந்துக் கொள்ளவும்.

பிறகு அதில் மைதாமாவினைப் போட்டு நன்கு கிளற வேண்டும்.

மைதா கெட்டியாக வரும்போது தேவையான பச்சரிசி மாவினை கலந்துக் கொள்ளவும். மாவு இன்னும் கெட்டியாக வரும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சற்று மிதமாக காய்ந்தவுடன் சிறு சிறு உருண்டைகளாக மைதா கலவையைப் போட்டு பொன் வறுவலாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: