பஜ்ஜி (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1/4 கிலோ

பச்சரிசி - 1 கைப்பிடி

காய்ந்த மிளகாய் - 10

சீரகம் - 1 தேக்கரண்டி

பூண்டு - 2 பல்

பெருங்காயம் - சிறிது

இட்லி சோடா - 1 சிட்டிகை

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பச்சரிசி, மிளகாய், சீரகம், பூண்டு, பெருங்காயம், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். சலித்த கடலை மாவு, இட்லி சோடாவுடன் அரைத்ததை சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.

வாழைக்காய், பெரிய வெங்காயம், ப்ரட், வெள்ளரிக்காய், பழுக்காத ஆப்பிள், பீர்க்கங்காய், புடலங்காய், உருளைக்கிழங்கு இவற்றில் எது விருப்பமோ அதை வட்டமாக, மெலிதாக நறுக்கி, கரைத்த மாவில் பஜ்ஜி போடவும்.

குறிப்புகள்: