சன்னா வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சன்னா - 1 கப்

இஞ்சி - 1 சிறிய துண்டு

பச்சை மிளகாய் - 5 (அல்லது) 6

கொத்தமல்லி இலை (அல்லது) புதினா இலை - சிறிதளவு

சோள மாவு (அல்லது) அரிசி மாவு - 1/2 தேக்கரண்டி

சோயா மாவு - 1 தேக்கரண்டி

எண்ணய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சன்னாவை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின் அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி (அல்லது) புதினா சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

இந்த அரைத்த கலவையில் உப்பு, மேற்கூறிய மாவு சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டிப் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: