பட்டர் மில்க் பேன் கேக்ஸ்





தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - ஒன்றரை கோப்பை
மைதா - கால் கோப்பை
பிரவுன் சுகர் - இரண்டு மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
பேக்கிங் சோடா - அரைத்தேக்கரண்டி
உப்புத்தூள் - அரை தேக்கரண்டி
முட்டை - இரண்டு
கெட்டியான மோர் - இரண்டு கோப்பை
ஆலிவ் ஆயில் - கால் கோப்பை
செய்முறை:
ஒரு பெரிய கோப்பையில் மாவுகளை போட்டு அதனுடன் பேக்கிங் பவுடர், சோடா, சர்க்கரை, உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்கு கலந்து வைக்கவும்.
முட்டையை நன்கு நுரைக்க அடித்து அதனுடன் எண்ணெய் மற்றும் மோரை ஊற்றி நன்கு கலக்கி மாவுக் கலவையில் ஊற்றி இலேசாக கலக்கவும்.
பின்பு அடுப்பில் தோசைக்கல்லை காயவைத்து அனலை நிதானமாக வைத்து மாவுக்கலவையிலிருந்து சிறு சிறு தோசைகளாக ஊற்றி இரண்டு புறமும் சிவக்க சுட்டு எடுக்கவும்.
இந்த சுவையான பேன் கேக்குகளை பிடித்தமான பழங்கள் மற்றும் பழசாஸ்ஸுகளுடன் காலை உணவாக பரிமாறவும்.