ஷார்ஜா ஜுஸ்

on on on off off 4 - Good!
3 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பால் 1/2 லிட்டர்

சீனி 150 கிராம்

வாழைப்பழம் 1

மாதுளை பழம் 1சிறியது

வறுத்த வேர்கடலை 1/4 கப்

ஐஸ் கட்டி 1/2 கப்

செய்முறை:

பாலை காயிச்சி நன்கு ஆறவிடவும்.

வேர்கடலையை தோல் நீக்கி விட்டு மிக்ஸியில் கரகரப்பாக பொடி செய்துக் கொள்ளவும்.

வாழைப்பழத்தை தோல் நீக்கி வைக்கவும்.

மாதுளை பழத்தையும் தோல் நீக்கி வைக்கவும்.

பின் மிக்ஸியில் பழங்களை போட்டு நன்கு அரைக்கவும் பழங்கள் நன்கு அரைந்ததும்.சீனியையும்,பாலையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.

அதில் பொடி செய்து வைத்துள்ள வேர்கடலையை சேர்த்து நன்கு நுறை பொங்க அடிக்கவும்.

ஐஸ் கட்டியை சேர்த்து நன்கு அடிக்கவும்.

சுவையான ஷார்ஜா ஜுஸ் ரெடி.

நீளமான கண்ணாடி க்ளாஸில் ஊற்றி சில்லென்று பரிமாறவும்

குறிப்புகள்: