மீன் லவோலம்மா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீன் - 2

மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி

தக்காளி - 2

வெங்காயம் - 4

பூண்டு - 12 பல்

தேங்காய் பூ - 2 கப்

பச்சை மிளகாய் - 4

உப்பு - அரை மேசைக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

புளி - நெல்லிக்காய் அளவு

மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

மீனை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் மிளகாய்த்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும்.

அரைத் தேக்கரண்டி உப்பையும் சேர்த்து, மிளகாய்த்தூளில் மீன் துண்டங்களைப் பிரட்டி, சுமார் அரை மணி நேரம் ஊறவிடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகாய்தூளில் ஊறின மீன் துண்டங்களைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். மிகவும் வேகவிடக் கூடாது. வறுத்த மீன் துண்டங்களை தனியே வைக்கவும்.

தக்காளியை சிறு சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து முதலில் திக்கான பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் தண்ணீர் ஊற்றி அரைத்து இரண்டாம் பால் பிழிந்து எடுக்கவும்.

பூண்டு, நறுக்கிய இரண்டு வெங்காயம், பச்சை மிளகாய் மூன்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மீதமுள்ள நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் விழுது போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.

2 நிமிடம் வதக்கிய பிறகு மீதமுள்ள அரைத் தேக்கரண்டி மஞ்சள் தூளை சேர்த்து கிளறி விடவும்.

பின்னர் அதில் நறுக்கின தக்காளித் துண்டங்களைச் சேர்த்து கிளறிவிட்டு வேகவிடவும். கறிவேப்பிலை இலைகளையும் சேர்க்கவும்.

புளியை திக்காக கரைத்து அதனுடன் ஊற்றி விடவும். இலேசாக கொதித்ததும், தண்ணீர் பாலை ஊற்றவும்.

பின்னர் அதில் வறுத்து எடுத்துள்ள மீன் துண்டங்களைப் போட்டு, உப்பு சேர்க்கவும்.

பாத்திரத்தை மூடி வைத்து சுமார் 4 நிமிடம் கொதிக்க விடவும்.

4 நிமிடம் கொதித்த பிறகு திக்கான பாலை ஊற்றி, மூடி வைத்து மேலும் 2 நிமிடம் வேகவிட்டு பிறகு இறக்கி விடவும்.

சுவையான மீன் லவலோம்மா ரெடி. .

குறிப்புகள்: