சுரைக்காய் இறால் கூட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுரைக்காய் - 1

இறால் - 10

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

மசாலா தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிது

தக்காளி - 2

கொத்தமல்லி தழை - சிறிது

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் இறாலை சுத்தம் செய்து மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வெறும் சட்டியில் போட்டு தீயை மிதமானதாக வைத்து வரட்டிக்கொள்ளவும்.

தக்காளியை நறுக்கி வைக்கவும்.

சுரைக்காயை தோல் சீவி நறுக்கி வைக்கவும்

பின் வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு சட்டியை அடுப்பில் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து அதில் நறுக்கின தக்காளி வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, மஞ்சள் தூள், சுரைக்காய், மசாலா தூள், கறிவேப்பிலை, வரட்டிய இறால் கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும். தண்ணீர் அதிகம் சேர்க்காமல் வதக்கவும். வெந்தவுடன் இறக்கவும்.

குறிப்புகள்: