சிக்கன் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் பீஸ் - மூன்று பெரியது எலும்புடன்

ஸ்வீட் கார்ன் (அ) பேபி கார்ன் - 200 கிராம்

மிளகு தூள் - அரை தேக்கரண்டி

சோயா சாஸ் - அரை தேக்கரண்டி

முட்டை வெள்ளை கரு - ஒன்று

ஓட்ஸ் - மூன்று மேசைக்கரண்டி

பால் - ஒரு கப்

உப்பு - அரை தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை நன்கு கழுவி நான்கு கப் தண்ணீர் சேர்த்து உப்பு, சோயா சாஸ் சேர்த்து வேக வைக்கவும்.

வெந்ததும் வடிகட்டி தண்ணீர் தனியாக வைக்கவும், சிக்கனில் உள்ள துண்டுகளை தனியாக பிரித்தெடுத்து உதிர்த்து வைக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் + அரை ஸ்பூன் பட்டர் சேர்த்து சிக்கனை போட்டு மிளகு தூள் உப்பு தூள் சேர்த்து வதக்கி சிக்கன் வடித்த தண்ணீரை ஊற்றி கார்னையும் சேர்த்து நன்கு வேக விடவும்.

தனியாக ஓட்ஸை பால் + தண்ணீர் சேர்த்து காய்ச்சி சேர்க்கவும்.

கடைசியாக முட்டை வெள்ளை கருவை நன்கு நுரை பொங்க அடித்து ஒரு கையால் ஊற்றி கொண்டே மறு கையால் கிளறவும்.

தேவைக்கு மிளகு தூள் உப்பு தூள் சேர்க்கவும்

சுவையான சிக்கன் சூப் ரெடி. கட்லெட்டுடன் சாப்பிடவும்.

குறிப்புகள்: