கறி உருண்டை சால்னா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கறி - அரை கிலோ

உருண்டை தயாரிக்க:

எலும்பில்லாத கறி - கால் கிலோ

பச்சை மிளகாய் - இரண்டு

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி

வெங்காயம் - இரண்டு

கொத்தமல்லி தழை - அரை கப்

பொட்டுக்கடலை - இரன்டு மேசைக்கரண்டி

மைதா, கார்ன்ஃப்ளார், அரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி

சால்னா தாளிக்க:

எண்ணெய் - மூன்று தேக்கரண்டி

பட்டை - ஒன்று

வெங்காயம் - மூன்று

இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி

கொத்தமல்லி - கொஞ்சம்

புதினா - சிறிது

தக்காளி - மூன்று

பச்சை மிளகாய் - ஒன்று

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

தனியாத் தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

உருளைக்கிழங்கு - ஒன்று (தேவைப்பட்டால்)

தேங்காய் - மூன்று பத்தை

செய்முறை:

அரை கிலோ கறியில் எலும்பு கறி தனியா, எலும்பில்லாத கறி தனியா பிரிக்கவும்.

சுத்தம் செய்து கழுவியதும் வடைக்கு முதலில் உருண்டைக்கு அரைத்து வைத்து விடுங்கள்.

எலும்பில்லாத கறியில் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு, உப்பு, கரம் மசாலா பொடி போட்டு பிரட்டி, அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியும் சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்ஸியில்அரைக்கவும். பொட்டுகடலை பொடித்து சேர்க்கவும்.

அரிசி மாவு, சோள மாவு, மைதா மாவு மூன்றையும் சேர்க்கவும். தண்ணீர் இல்லாமல் கெட்டியாக அரைத்து வைக்கவும்.

சால்னா தயாரிக்க - இப்போது குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டையை போடவும்.

வெங்காயத்தை போட்டு நல்ல வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும், பிறகு கொத்த மல்லி, புதினா, எலும்பு கறி, பச்சை மிளகாய் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

பிறகு தக்காளி, மிளகாய் தூள், உப்பு, தனியாத்துள் சேர்த்து வதக்கி ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும். தேவைப்பட்டால் ஒரு உருளையை கட் பண்ணி போடவும்.

பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் விட்டு இறக்கி மற்றொரு வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும்.

தேங்காயை அரைத்தோ (அ) தேங்காய் பவுடர் பாலோ சேர்த்து மீண்டும் கொதிக்கவிட்டு அரைத்து வைத்துள்ள கறி வடை மாவை நெல்லிக்காய் அளவு உருட்டி எண்ணெயில் பொரித்து சால்னாவில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்

குறிப்புகள்: