இறால் அடை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் - கால் கிலோ

பச்சரிசி மாவு (ரவா பதத்தில்) - அரை படி

தேங்காய் துருவல் - ஒரு கப்

நாட்டு வெங்காயம் - கால் கிலோ

பச்சை மிளகாய் - 10

மல்லிக்கீரை - ஒரு கட்டு

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

மசாலாத்தூள் - ஒரு ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்

உப்பு - 2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் அரிசியை ரவா பதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், மல்லிக்கீரை அனைத்தையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.

இறாலை சுத்தம் செய்து, அத்துடன் மஞ்சள் தூள், மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு அனைத்தையும் போட்டு பிரட்டி, ஏற்கனவே நறுக்கி வைத்துள்ளவற்றையும் அத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அவற்றை வதக்க வேண்டும். நன்றாக வதங்கியவுடன், தேங்காய் துருவலையும் போட்டு லேசாக வதக்க வேண்டும்.

பிறகு அதன் சூடு ஆறியவுடன், அரிசி மாவில் கொட்டி நன்றாக கலக்க வேண்டும். அடை மாவு பதம் வரும் அளவுக்கு அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தேவைப்படும் அளவுக்கு உப்பும் அந்த மாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஆப்ப சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு ஒரு ஆப்பை அளவு மாவை ஊற்றி, கொஞ்சம் தட்டையாக்கி மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

முக்கால் வேக்காடு ஆனவுடன் அதை பிரட்டி விட்டு, மீண்டும் சிறிது எண்ணெய் சுற்றிலும் ஊற்றி பொன்முறுகலானவுடன் எடுத்து சூடாக பரிமாறலாம்.

இது மிகவும் டேஸ்ட்டியான ஒரு டிபன்.

குறிப்புகள்: