வெல்ல அதிரசம்

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 4 ஆழாக்கு

வெல்லம் - 1/2 கிலோ கிராம்

ஏலக்காய் - 2

சுக்கு தூள் - சிறிது

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.பின்பு தண்ணீரை வடித்து,மிக்சியில் போட்டு மாவாக அரைத்து,சலித்து வைக்கவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தை தூளாக்கி போட்டு,சிறிது தண்ணீர் சேர்த்து,பாகு காய்ச்சவும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து,அதில் ஒரு சொட்டு வெல்லப் பாகை விட்டால்,கையில் உருட்ட வர வேண்டும்.இது தான் பதம்.

இப்போது பாகை அடுப்பில் இருந்து இறக்கி வைத்துவிட்டு,ஈர பச்சரிசி மாவை சிறிது,சிறிதாக கொட்டி கிளறவும்.

இந்த கலவை சிறிது ஆறியதும்,சிறு சிறு உருண்டைகளாக எடுத்து,எண்ணெய் தடவியுள்ள வாழையிலை அல்லது பாலீத்தீன் பேப்பரில் தட்டி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும், தட்டி வைத்துள்ள மாவை போட்டு பொரித்தெடுக்கவும்.

பொரித்த அதிரசத்தை இரு சல்லி கரண்டிகள் நடுவே வைத்து அழுத்தி,எண்ணெயை பிழிந்து கொள்ளவும். சுவையான வெல்ல அதிரசம் தயார்.

குறிப்புகள்: