குழிப்பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு - ஒரு கிண்ணம்

கருப்பட்டி - 150 அல்லது 200 கிராம்

ரவை - 3/4 டம்ளர்

ஏலக்காய் - 4

சுக்குப் பொடி - 2 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 3 அல்லது 4 தேக்கரண்டி

எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

அடுப்பில் பாத்திரத்தை வைத்து கருப்பட்டியை போட்டு சிறிது தண்ணீர் விட்டு அதில் சுக்கு பொடி, ஏலக்காயை தட்டி போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

இறக்கி வைத்து வடிகட்டி மாவில் ஊற்றி அதனுடன் ரவை, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுப்பில் பணியார சட்டியை வைத்து குழிகளில் எண்ணெய் ஊற்றி அதில் மாவை ஊற்றி சிறு தீயில் வேக விடவும்.

வெந்ததும் திருப்பி விட்டு கோல்டன் கலர் வந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

வீட்டில் இருக்கும் மாவை வைத்து சுலபமாக செய்து விடலாம் இனிப்பு அவரவர் விருப்பத்திற்க்கு கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம் விரும்பினால் நெய் விட்டு சுடலாம்