சுட்ட மீன் (சாஸுடன்)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீன் - 2

மிளகாய் தூள் - 5 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி

மிளகு சீரகத்தூள் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

சாஸ் செய்வதற்கு:

தேங்காய் பால் - 1 கப்

எலுமிச்சை சாறு - 5 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - 1

மல்லிக்கீரை - பாதி கட்டு

செய்முறை:

மீனை சுத்தம் செய்த பிறகு துண்டமாக வெட்டாமல் ஆழமாக கீறல்கள் போட்டு, மிளகாய்தூள், மஞ்சள் தூள், மிளகு சீரகத்தூள், உப்பு அனைத்தையும் சில சொட்டு தண்ணீர் விட்டு குழைத்து அதன் மேல் தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், மல்லிக்கீரையை சன்னமாக நறுக்கிக்கொள்ளவும்.

தேங்காய்ப்பாலில் எலுமிச்சைச்சாறும், சிறிது உப்பும் கலந்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு மணி நேரம் ஊறிய மீனை எடுத்து ஒரு க்ரில்லில் வைத்து, நெருப்பு தனலிலோ அல்லது அவனிலோ வைத்து பதமாக சுட்டு எடுக்கவும்.

பிறகு அதன்மேல் செய்துவைத்துள்ள சாஸை ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லிக்கீரையை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: