இறால் வாழைக்காய் வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் - 1/4 கிலோ

பெரிய வாழைக்காய் - 1

தாளிப்பு வடகம் - பாதி உருண்டை

மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

மல்லி தூள் - 3 தேக்கரண்டி

உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

இறால் பெரியதாக இல்லாமல் சிறியதாக இருக்க வேண்டும். இறாலின் தலையையும் வால் நுனியையும் கிள்ளி எடுத்துவிட்டு கழுவி வைக்கவும்.

சிறிய இறாலாக இருந்தால் தோலை உரிக்க வேண்டாம்.

வாழைக்காயை வட்டமான துண்டங்களாக நறுக்கவும்.

ஒரு வாணலியில் 6 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வடகம் தாளிக்கவும்.

வடகம் பொரிந்ததும் இறால், வாழைக்காய், இரண்டையும் போடவும். மிளகாய்தூள், மல்லித்தூள், உப்பு சேர்க்கவும். ஒரு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.

வறுவல் மிதமான ரோஸ்டானதும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: