விரால்மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
விரால்மீன் - 1/2 கிலோ
மாங்காய் - 1
புளி - ஒரு பெரிய எலுமிச்சம்பழ அளவு
வர மிளகாய் - 8
மல்லி - 4 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 12
கறிவேப்பிலை - 3 கொத்து
தாளிக்கும் வடகம் - பாதி உருண்டை
விளக்கெண்ணெய் - 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீனை கழுவி சுத்தப்படுத்தவும். ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
வரமிளகாய், மல்லி, மிளகு, சீரகம், வெந்தயம், சின்ன வெங்காயம் 5, கறிவேப்பிலை ஒரு கொத்து இவற்றை சிவக்க வறுக்கவும். வறுத்ததை அரைக்கவும்.
புளியை கரைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயத்தை உரித்து நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 தேக்கரண்டி விளக்கெண்ணெய், 4 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடு பண்ணவும், தாளிக்கும் வடகம் போடவும்.
வடகம் பொரிந்ததும் சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். அரைத்த மசாலாவையும் கரைத்த புளியையும் ஊற்றவும்.
ஒரு கொதி வந்ததும் மீனை சேர்க்கவும். மாங்காயையும் போடவும், உப்பு சேர்க்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும், எண்ணெய் தெளிந்ததும் இறக்கி பரிமாறவும்.