மூளைக் குழம்பு
0
தேவையான பொருட்கள்:
மூளை - 2
மிளகாய் வத்தல் - 6
தேங்காய் - 1/2 மூடி
சீரகம் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
நல்லெண்ணைய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மூளையை நன்கு சுத்தம் செய்து 8 துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
வத்தலையும் சீரகத்தையும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம்,மூளை யையும் சேர்த்து வதக்கவும்.
தேங்காயை அரைத்து பாலெடுக்கவும்.
தேங்காய் பாலுடன் அரைத்த மசாலாவை சேர்த்துக் கலக்கவும்.
வதக்கிய மூளையுடன் தேங்காய் பால் கலவையை சேர்த்து கிளறவும்.
அப்போது உப்பு, மஞ்சள் தூள் போட்டு சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.
குழம்பு கெட்டியாகி எண்ணைய் பிரிந்து வரும் வரை நன்கு கொதிக்கவிடவும்.
மூளைக்குழம்பு ரெடி.