முட்டை வடைகுழம்பு

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முட்டை வடை செய்ய:

முட்டை - 3 அல்லது 4

புழுங்கல் அரிசி - 100 கிராம்

துவரம்பருப்பு - ஒரு கைப்பிடி

பெரிய வெங்காயம் - 2

மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

குழம்பு செய்ய:

புளி - எலுமிச்சை பழ அளவு

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி

மல்லிதூள் - 4 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி

தேங்காய் துருவல் - ஒரு கப்

சோம்பு - கால் தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் - ஒரு கரண்டி

சோம்பு - கால் தேக்கரண்டி

பட்டை - 3 துண்டு

கிராம்பு - 5

பெரிய வெங்காயம் - 1

பூண்டு - 10 பல்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

தக்காளி - 1

செய்முறை:

வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும்.

அரிசையையும், பருப்பையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து மிக்சியில் கெட்டியாக அரைக்கவும்.

அரைத்த அரிசி மாவு கலவையில் முட்டை, வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிய வடையாக எடுத்து ஊற்றவும்.

இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும். இந்த வடை சாப்பிட மிருதுவாக இருக்கும்.

ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து ஊற்றி அதில் அரைத்த தேங்காய் விழுது, உப்பு, சேர்த்து நீர்க்க கரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளிக்கவும்.

தாளித்து வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் குழம்பு கலவையை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கவும்.

குழம்பு ஆறினதும் வடையை சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: