முட்டை குழம்பு (7)
தேவையான பொருட்கள்:
முட்டை - 2
வெங்காயம் - 1
தக்காளி - 2
மஞ்சள்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
தனியாபொடி - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5 இலை
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
உளுந்து - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் மற்றும் தக்காளியை சிறியதாக அரிந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியவுடன் மஞ்சள்த்தூள், மிளகாய்தூள் மற்றும் தனியாத்தூள் சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
மிளகாய்ப்பொடி வாசம் மறைந்தவுடன், முட்டையை உடைத்து அதில் ஊற்றி நன்கு கிளறவும்.
முட்டை வெந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.