முட்டை குழம்பு (6)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 4

வெங்காயம் - 100 கிராம்

தேங்காய் பால் - 3 கப்

பச்சைமிளகாய் - 4

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

எழுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

பூண்டு - 4 பல்

கருவேப்பிலை - ஒரு கொத்து

சோம்பு - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் முட்டையை வேகவைத்துக்கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பூண்டு, பச்சைமிளகாயையும் நறுக்கிக்கொள்ளவும்.

பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு பொரிந்ததும்,கருவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

பின்பு மஞ்சள்தூள்,பூண்டு,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி 1 கப் தேங்காய் பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

பின்பு முட்டையை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு மீதி இருக்கும் தேங்காய்பால்,எழுமிச்சை சாறு, உப்பு சேர்த்து ஒரு கொதி கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: