முட்டை குழம்பு (4)
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2
தேங்காய்ப்பால் 1 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிது
வெந்தயம் - 1 பின்ச்
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
சீரக பொடி - 1 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி
தனியா பொடி - 1 1/2 தேக்கரண்டி
பட்டை - சிறிது
ரம்பை இலை (விரும்பினால்) - சிறிது
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சை மிளகாய், வெங்காயத்தை நீளமாக, தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு வெந்தயம் சேர்த்து சிவந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை, ரம்பை இலை, இரண்டாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
உப்பு மற்றும் மசாலாப்பொடி சேர்த்துக்கிளறி தேங்காய்ப்பால் சேர்க்கவும்.
நன்கு கொதிக்கும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்து முட்டையை உடைத்து மெதுவாக கிரேவியில் விடவும்.
அடுப்பை சிம்மில் வைத்தே முட்டையை வேகச் செய்யவும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இடியாப்பம், சப்பாத்திக்கு ஏற்ற சையிட் டிஷ்