முட்டை குழம்பு (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேக வைத்து 4 துண்டாக வெட்டிய முட்டை - 4

வெங்காயம் - 1 (அல்லது) 15 சின்ன வெங்காயம்

தக்காளி - 1

கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

இஞ்சி விழுது - 1/4 தேக்கரண்டி

பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - 1 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

மிளகாய் வற்றல் - 5

மல்லி - 1/4 மேசைக்கரண்டி

ஏலக்காய் - 2

மிளகு - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

பட்டை - 1

லவங்கம் - 2

கறிவேப்பிலை - கொஞ்சம்

தேங்காய் - 1/4 கப் (அல்லது) 1/2 கப் தேங்காய் பால்

செய்முறை:

தேங்காய் தவிற அரைக்க வேண்டிய அனைத்தையும் வெறும் கடாயில் போட்டு வறுத்து வைக்கவும். இதை தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பாதி வதங்கியது இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

இதில் உப்பு, மஞ்சள் தூள், அரைத்த மசாலா, முட்டை சேர்த்து, தேவைக்கு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். மசாலா வாசம் போனதும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: