முட்டை குழம்பு (2)

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முட்டை - 4

உருளை - 2

வெங்காயம் - 1

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 1

தனியா தூள் - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

கரம்மசாலா - சிறிதளவு

பட்டை - 1

ஏலக்காய் - 2

கிராம்பு - 2

இஞ்சி பூடு விழுது - 2 தேக்கரண்டி

தேங்காய் பால் - 1 கப்

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை,ஏலக்காய்,கிராம்பு முறியவிடவும்.

அதில் பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

இஞ்சி,பூடு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பின் எல்லாத்தூள்களையும் அதன் பின் தக்காளியும் சேர்க்கவும். (அடி பிடிக்காமல் இருக்க சிறிது தேங்காய் பால் சேர்க்கலாம்).

எண்ணெய் நன்கு மேலே பிரிந்து வந்ததும் தான் உருளை கிழங்கு சேர்த்து வதக்க வேண்டும்.

பின் தேங்காய் பால் மற்றும் தேவைக்கு தண்ணீர் ஊற்றி மூடிவிடவும்.

உருளை முக்கால் பாகம் வெந்ததும் அடுப்பை சிறுதீயில் வைத்து முட்டையை உடைத்து மெதுவாக குழம்புக்குள் விடவும்.

மூடி வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: