முட்டை குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 3

வெங்காயம் - 1

பஜ்ஜி மிளகாய் - 1

பேபி தக்காளி - 10

மல்லித் தழை - சிறிது

பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

சீரக தூள் - 1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 2 தேக்கரண்டி

தேங்காய் பால் - 1/2 கப்

கடுகு, கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பஜ்ஜி மிளகாய், தக்காளி மற்றும் மல்லித் தழையை நறுக்கி வைக்கவும். முட்டையை வேக வைத்து ஓடு நீக்கி கத்தியால் கீறி வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பஜ்ஜி மிளகாய், பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு இவற்றை ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் தக்காளி, மல்லித் தழை, மிளகு தூள், சீரக தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.

அவற்றோடு முட்டை, தேங்காய் பால் சேர்த்து 15 நிமிடம் சிறு தீயில் வைத்து வேக விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: