முட்டை அடை குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை அடைக்கு:

முட்டை- 4

துவரம் பருப்பு - 1/2 கப்

கடலை பருப்பு - 2 மேசைக்கரண்டி

தேங்காய்த்துருவல் - 2 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

குழம்பிற்கு:

புளி - எலுமிச்சம்பழ அளவு

தக்காளி - 1 கப்

பொடியாக அரிந்த சிறிய வெங்காயம் - 1/2 கப்

மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

கொத்தமல்லித்தூள் - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

தேங்காத்துருவல் - 1/2 கப்

சோம்பு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 5 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முட்டைகளை சிறிது நீர் தெளித்து நன்கு அடித்துக்கொள்ளவும்.

பருப்பு வகைகளை போதுமான நீரில் 4 மணி நேரம் ஊற வைத்து பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், சோம்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த கலவை, முட்டை, தேவையான உப்பு அனைத்தும் கலந்து வைக்கவும்.

தோசைக்கல்லை சுட வைத்து சிறு சிறு அடைகள் வார்த்தெடுக்கவும்.

புளியை 2 கப் நீரில் ஊறவைத்து சக்கையில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை சுட வைத்து எண்ணெயை ஊற்றவும்.

வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.

புளியை ஊற்றி தூள்கள், உப்பு 1 கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

தேங்காயை சோம்புடன் மையாக அரைத்துச் சேர்க்கவும். குழம்பு கொதித்து தூள் வாசனை அகன்று, சற்று கெட்டியானதும் இறக்கவும்.

குறிப்புகள்:

பரிமாறும்போது முட்டை அடைகளைச் சேர்த்து பரிமாறவும்.