மீன் குழம்பு (7)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீன் - 1/4 கிலோ

தேங்காய் பால் - ஒரு சிறிய டம்ளர்

புளி - 1 1/2 எலுமிச்சை அளவு

சிறிய பச்சை மிளகாய் - 3

கொத்தமல்லி தழை - சிறிது

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

தனியா தூள் - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

பெரிய வெங்காயம் - 1

பெரிய தக்காளி - 3

தாளிக்க:

கடுகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

வெங்காயம் - 1

பூண்டு - 3 பல்

கறிவேப்பிலை - அரை கைபிடி அளவு

எண்ணெய் - நான்கு தேக்கரண்டி

செய்முறை:

மீனை சுத்தம் செய்து கழுவி துண்டுகள் போட்டு வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும். நறுக்கின ஒரு வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பூண்டை தோல் உரித்து விட்டு தட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தாளிக்க தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு பொரிய விடவும்.

அதனுடன் நறுக்கின வெங்காயம், தட்டி வைத்திருக்கும் பூண்டு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கவும்.

வெங்காயம், பூண்டு வதங்கியதும் வெங்காய, தக்காளி விழுதை ஊற்றி தீயை குறைத்து வைத்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு போட்டு நன்கு கிளறி விட்டு மசாலா வாசனை போகும் வரை வதக்கி விடவும். அதனுடன் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி கிளறி விடவும்.

புளி வாசம் அடங்கியதும் மீன் துண்டுகள் மற்றும் தேங்காய் பாலை ஊற்றி தீயை குறைத்து வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்து மேலே வரும் போது அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: