மீன் குழம்பு (14)
தேவையான பொருட்கள்:
(குழம்பு) மீன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 3
பூண்டு - 10 பல்
தக்காளி - 3
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - ஒரு எழுமிச்சம் பழ அளவு
உப்பு - தேவையான அளவு
வதக்கி அரைக்க:
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
தனியா - 3 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
மிளகாய் - 10
தாளிக்க:
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
மீனை சுத்தம் செய்து, உப்பு, மஞ்சள் தூள் தேய்த்து, கழுவி வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பூண்டை நசுக்கி வைக்கவும்.
புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வடிகட்டவும்.
வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், சோம்பு, மிளகாய், தனியா சேர்த்து வறுக்கவும்.
வறுத்தவற்றை தேங்காயுடன் சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி, கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
அத்துடன் நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் அரைத்து வைத்த மசாலா சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.
புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.
குழம்பு கெட்டியானதும் சுத்தம் செய்த மீனை சேர்க்கவும். மீன் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.