மீன் கிரேவி
தேவையான பொருட்கள்:
மீன் - 1/4 கிலோ
இஞ்சி - 2 தேக்கரண்டி
பூண்டு - 2 தேக்கரண்டி
எழுமிச்சை சாறு - 1 1/2 மேசைக்கரண்டி
தக்களி சாஸ் - 3 மேசைக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிது
எண்ணெய் பொறிக்க - தேவையான அளவு
எண்ணெய் தாளிக்க - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீன் கிரேவி முதலில் மீனை சுத்தம் செய்து அதில் உப்பு, இஞ்சி விழுது 1 தேக்கரண்டி,பூண்டு விழுது 1 தேக்கரண்டி எழுமிச்சை சாறு ஊற்றி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் மீனை டீப் ப்ரை பண்ணி முக்கால் வேக்காடு வெந்ததும் தனியாக எடுத்து வைத்து எண்ணெய் வடிய விடவும்.
ஒரு சட்டியில் எண்ணெய் சிறிது ஊற்றி இஞ்சி,பூண்டு விழுது போட்டு வதக்கி,பின் தக்காளி சாஸ்,உப்பு,கொத்தமல்லிதூள் சேர்த்து கிளறி தீயை குறைத்துவைத்து கிரேவி பண்ணவும்.கிரேவியானதும் பொறித்துவைத்த மீனை போட்டு கிளறி மிதமான தீயில் வைத்து பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.