தேங்காய்ப்பால் கோழி குழம்பு
தேவையான பொருட்கள்:
கோழி - ஒன்று
தேங்காய் - பாதி மூடி
சின்ன வெங்காயம் - 25
முழு பூண்டு - 2 அல்லது 20 பல் பூண்டு
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 15
இஞ்சிப்பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
பட்டை - 1
கிராம்பு - 4
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 4 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - ஒரு பிடி
சூரியகாந்தி என்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழியை வெட்டி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
சின்ன வெங்காயம், பூண்டை உரித்துக்கொள்ளவும்.
தேங்காயை துருவி கெட்டியான முதல் பாலை தனியாகவும், இரண்டாவது பாலை தனியாகவும் வைக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.
அடி கனமான பாத்திரம் அல்லது குக்கரை அடுப்பில் வைக்கவும்.
எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.
சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
கோழி சேர்த்து நன்றாக வதக்கி, இரண்டாவது தேங்காய்ப்பாலை சேர்த்துக்கிளறி பாத்திரத்தை ஒரு தட்டு போட்டு மூடி 15 நிமிடம் வேக வைக்கவும்.
நன்றாக வெந்தததும் முதல் பாலை ஊற்றி கிளறி 5 நிமிடம் கழித்து எண்ணெய் தெளிந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.