திருக்கை மீன் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

திருக்கைமீன் - 1/4 கிலோ

சின்ன வெங்காயம் - 100 கிராம்

முழு பூண்டு - 1

புளி - பெரிய எலுமிச்சை அளவு

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

மல்லித் தூள் - 3 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 1/2 கப்

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 மேசைக்கரண்டி

எண்ணெய் - 3 1/2 மேசைக்கரண்டி

கல் உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். மிளகு, சீரகத்தை எண்ணெய் ஊற்றி வறுத்து பொடி செய்துக் கொள்ளவும்.

புளியுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். ஊறியதும் புளியை கரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு மீண்டும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்து எடுத்துக் கொள்ளவும். புளி கரைசலுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் போட்டு கரைத்துக் கொள்ளவும்.

தேங்காய் துருவலுடன் மிளகு, சீரகம், 5 பூண்டு பல் போட்டு 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

கரைத்து வைத்திருக்கும் புளி கலவையில் தேங்காய் விழுதை ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.

சட்டியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி வடகம் போட்டு தாளித்து சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மீதமுள்ள பூண்டு, பச்சை மிளகாய் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

பிறகு தக்காளியை போட்டு 4 நிமிடம் வதக்கி கரைத்து வைத்திருக்கும் புளி கலவையை ஊற்றவும்.

அதில் மேலும் கால் கப் தண்ணீர் ஊற்றி மீனை போட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.

15 நிமிடம் கழித்து மூடியை திறந்து வைக்கவும். பிறகு 5 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: