சுறா பூண்டு குழம்பு
தேவையான பொருட்கள்:
சுறா - 1/2 கிலோ
பூண்டு - 3 முழு பூண்டு
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகு - 3 தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
வெங்காயம் - 3 கப்
தக்காளி - 3 கப்
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி இலை - அரை கட்டு
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் பூண்டு (2 முழு பூண்டு) சேர்த்து வதக்கவும்.
மீதமுள்ள பூண்டு, மிளகு மற்றும் சீரகத்தை அரைத்து வைத்து கொள்ளவும். பூண்டு சற்று வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்பு எல்லாத் தூளையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து வதக்கவும். இப்பொழுது பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். சுறா துண்டங்களை சேர்த்து போதுமான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
சுறா வெந்ததும் புளி தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.