சீலாமீன் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சீலா மீன் - 4

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கலந்த மிளகாய் தூள் - 5 மேசைக்கரண்டி

தேங்காய் துருவல் - ஒரு மூடி

சின்ன வெங்காயம் - 100 கிராம் + 10

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

புளி - பெரிய எலுமிச்சை அளவு

பெரிய தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

கல் உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும். தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காய் துருவலை போட்டு ஒரு முறை அரைத்து விட்டு அதனுடன் சின்ன வெங்காயத்தை போட்டு நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

10 சின்ன வெங்காயத்தை மட்டும் இரண்டிரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

புளியுடன் 3 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். புளிக்கரைசல் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேங்காய் விழுது, பச்சை மிளகாயை போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, நறுக்கின சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.

அதில் கரைத்த புளிக்கரைச்சலை ஊற்றி மூடி வைத்து கொதிக்க விடவும்.

5 நிமிடம் கழித்து கொதித்து மேலே நுரை வரும் போது உப்பு, தக்காளி சேர்த்து மிக்ஸி கழுவிய தண்ணீர் அரை கப் அளவு மற்றும் மேலும் அரை கப் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் கொதிக்க விடவும்.

அதன் பின்னர் மீன் துண்டுகளை சேர்த்து இடையிடையே கிளறி விட்டு 12 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: