சில்லி சிக்கன் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

வெங்காயம் - 1

தக்காளி - 1

தயிர் - அரை கப்

மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி

சிறிய குடைமிளகாய் - 2

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லி - சிறிது

இஞ்சிபூண்டு விழுது - 1 தேக்கரண்டி

கறிக்குழம்பு கரம் மசாலா - 1 மேசைக்கரண்டி

பூண்டு - 6 பல்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதை தயிர், அரை தேக்கரண்டி உப்பு மற்றும் மஞ்சள்தூள், கலந்து குளிர்சாதனப்பெட்டியில் அரை மணிநேரம் வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை அரிந்துக்கொள்ளவும். பச்சைமிளகாயை கீறிக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

பிறகு குளிச்சாதனப்பெட்டியில் வைத்துள்ள சிக்கனை போட்டு 5 நிமிடம் வதக்கவும். இப்போது தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியவுடன் மிளகாய்தூள் சேர்த்து கிளறி 3 கப் தண்ணீர் ஊற்றவும்.

தண்ணீர் கொதிவந்தவுடன் குடைமிளகாயைச் சேர்க்கவும்.

சிக்கன் வெந்தவுடன் நசுக்கிய பூண்டுடன் கோழிக்குழம்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து குழம்பில் கலக்கவும். கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: