சிக்கன் மிளகு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

மிளகுத்தூள் - 3 தேக்கரண்டி

மிளகாய்ப்பொடி - 3 தேக்கரண்டி

பூண்டு - 6 பல்

வெங்காயம் - 4

தக்காளி - 4

கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து தட்டிய பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

அதில் கோழியை சேர்த்து கிளறி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு போட்டு நன்கு வதக்கி 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி மூடவும். குழம்பு கொதித்து வற்றியதும் மல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: